பாஜக 3ஆவது முறையாக ஆட்சிக்கு வராது: முதல்வர் ஸ்டாலின்

பாஜக 3ஆவது முறையாக ஆட்சிக்கு வராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
பாஜக 3ஆவது முறையாக ஆட்சிக்கு வராது: முதல்வர் ஸ்டாலின்

பாஜக 3ஆவது முறையாக ஆட்சிக்கு வராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காங்கேயத்தில் மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூடடத்தில் முதல்வர் ஆற்றிய உரையில், நாடாளுமன்ற தேர்தலின் தொடக்க புள்ளியாக முகவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். பெரியாரும் அண்ணாவும் முதன்முதலில் சந்தித்த ஊர்தான் திருப்பூர். திமுக அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் தொடர்ந்து எடுத்துக்கூற வேண்டும். 

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பள்ளி மாணவர்கள் அதிகம் பங்கேற்ற ஊர் திருப்பூர். வாக்குச்சாவடி முகவர்கள் மீது நம்பிக்கை வைத்தே தேர்தலில் 40க்கு 40 வெற்றி எனக் கூறி வருகிறேன். தமிழகத்தில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் 2அவது முறையாக ஆட்சி செய்யும் பாஜக 3அவது முறையாக ஆட்சிக்கு வராது. இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறதா?. 

சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. பாஜக டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பத்திரமாக ஆவணங்களாக உள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அளிக்கும் மக்கள் கோரிக்கைகளை எம்எல்ஏ, அமைச்சர் நிறைவேற்ற வேண்டும். கவலையின்றி மக்களை சந்தியுங்கள், யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com