ஆா்.எஸ்.பாரதி 2018 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி அன்றைய முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அதில், ‘தனக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ரூ. 4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் பதவியையும், முதல்வா் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளாா். அதனடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் தண்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.