வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை 

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

News image
கோப்புப் படம்.
Updated On :25 செப்டம்பர் 2023, 7:22 am

DIN

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்து அவர் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஓராண்டாக முன்வைத்து வந்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல்கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான காரணம்பேட்டையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து கதவடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தமிழக முதல்வர் மின் கட்டணம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில் தொழில் அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி இன்று முதல் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்களும், கோவையில் 30 ஆயிரம் நிறுவனங்கள் உட்பட திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 63 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. 

தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் ரூ.1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு மற்றும் 3 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.