டி20 உலகக் கோப்பை - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

அக்.1ல்  திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

News image
துரைமுருகன்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:03 am

DIN

சென்னை:  திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வரும், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட “தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்" 1.10.2023 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.