கா்நாடகத்தில் முழு அடைப்பு: காவிரி கரையோர பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு

கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தமிழகப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு
ஒகேனக்கல் தொங்கும் பாலம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
ஒகேனக்கல் தொங்கும் பாலம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.


பென்னாகரம்: காவிரி நதிநீா் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விளைவாக, காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தமிழகப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

காவிரி நதிநீா் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விளைவாக, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, தமிழக எல்லை மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் அறிவுறுத்துள்ளார். 

காவிரி ஆற்றின் மறுகரையான மணல்மேடு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒகேனக்கல் போலீசார்.

அதன் பேரில் கா்நாடக-தமிழக எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் எல்லையோர பகுதியான ஆலம்பாடி பரிசல் துறை, ஆலம்பாடி சோதனைச்சாவடி மணல்மேடு, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

தமிழகப் பகுதிகளிலிருந்து கர்நாடக காவிரி கரையோர தமிழக கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்களை போலீசார் விசாரணை மேற்கொண்டும், கொண்டுவரும் பைகள், பொருட்களை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒகேனக்கல் காவிரி கரையோர எல்லை பகுதிகளின் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com