தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவர் எஸ்.கிருஷ்ணன் ராஜிநாமா!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணனுக்கு 2 ஆண்டு பணிக்காலம் உள்ள நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவர் எஸ்.கிருஷ்ணன் ராஜிநாமா!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணனுக்கு 2 ஆண்டு பணிக்காலம் உள்ள நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இயக்குநர்கள் குழு எஸ்.கிருஷ்ணனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது.

சமீபத்தில், சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக சுமார் ரூ.9000 கோடி அனுப்பிய விவகாரம் தொடர்பாகவே ராஜிநாமா செய்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், தனது சொந்த காரணங்களுக்காகவே ராஜிநாமா செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியிடம் இருந்து வழிகாட்டுதல் ஆலோசனை பெறப்படும் வரை கிருஷ்ணன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக தொடர்ந்து செயல்படுவார் என்றும் அது குறித்து சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந் த ஜூன் மாதம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 285பிஏ-இன் கீழ் வருமான வரித்துறையினர், வங்கியில் உள்ள ஆவணங்களை சோதனையிட்டது மற்றும் ரிசர்வ் வங்கியின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜனவரி 1983 இல் இந்தியன் வங்கியில் தனது வங்கிப் பணியைத் தொடங்கிய கிருஷ்ணன், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ரிஸ்க் மேனேஜ்மென்ட், இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் செக்யூரிட்டி, மனிதவள மேலாண்மை போன்ற வங்கித் துறைகளில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.  இந்தியன் வங்கியின் நிர்வாகச் செயலாளராகவும் இருந்துள்ளார். சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநராக நவம்பர் 1, 2017 முதல் செப்டம்பர் 3, 2020 வரை இருந்தார். கனரா வங்கியுடன் சிண்டிகேட் இணைப்பு செயல்முறைக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார்.

ஐபிஏ நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கான நிலைக்குழுவின் மாற்றுத் தலைவராகவும், பொதுத்துறை வங்கிகளில் செயல்திறன் மேலாண்மை அமைப்புகளுக்கான ஐபிஏ துணைக் குழுவின் உறுப்பினராகவும்  கிருஷ்ணன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com