
அண்ணாமலை குறித்து எந்த கேள்விகளும் கேட்காதீர்கள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரசியலில் அடிப்படைத் தன்மை தெரிந்து பேச வேண்டும். 50 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன், என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும்.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக அண்ணாமலை பேசி வருகிறார். முதிர்ந்த அரசியல்வாதியின் கருத்து குறித்து கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதைக் கூட ஒளிபரப்பு செய்ய மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் காவல்துறைக்கு பாதுகாப்பில்லை என்பதை பெரியகுளம் சம்பவம் காண்பிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.