ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அண்ணாமலை மீது வழக்கு: திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி

திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ள அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை: திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ள அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கூறி களங்கம் கற்பித்துள்ள அண்ணாமலை, 15 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை கூறிய பொய்க் குற்றச்சாட்டுக்களை திமுக எதிர்கொள்ளும் என்று திமுக சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவின் சட்டத்துறை, திமு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலின் பேரில் அண்ணாமலையின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கொள்ளும். அதற்குரிய வழக்குகள் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொடரப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com