12 மணி நேர வேலை: திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு

12 மணி நேர வேலைக்கான சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

12 மணி நேர வேலைக்கான சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழில் நிறுவனங்களின் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்டக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து சிபிஎம், சிபிஐ, விசிக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்ட மசோதா குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும். 

வாரத்துக்கான 48 மணி நேர வேலையை 4 நாளில் முடித்தபின் 5 வது நாளில் வேலைசெய்ய விரும்பினால் கூடுதல் சம்பளம் விரும்பக்கூடிய தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதிய சட்டம் பொருந்தும் என்று அமைச்சர் கணேசன் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com