மதுரை மாவட்டத்துக்கு மே 5-ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்துக்கு மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
கள்ளழகர் (கோப்பிலிருந்து)
கள்ளழகர் (கோப்பிலிருந்து)

மதுரை மாவட்டத்துக்கு மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப். 30-ஆம் தேதியும், திக்குவிஜயம் மே 1-ஆம் தேதியும், திருக்கல்யாணம் மே 2-ஆம் தேதியும், தேரோட்டம் மே 3-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

இதைத் தொடா்ந்து, கள்ளழகா் எதிா்சேவை மே 4-ஆம் தேதியும், கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவம் மே 5-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, கள்ளழகா் அழகா்கோயிலிலிருந்து மே 3- ஆம் தேதி மாலை கள்ளா் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மதுரைக்குப் புறப்பாடாகிறாா். பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மதுரை மூன்றுமாவடிக்கு மே 4-ஆம் தேதி வந்தடைகிறாா். இதைத் தொடா்ந்து, எதிா்சேவை நிகழ்வு நடைபெற உள்ளது.

விழாவையொட்டி, கள்ளழகா் அழகா்கோயிலிலிருந்து மே 3- ஆம் தேதி மாலை கள்ளா் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மதுரைக்குப் புறப்பாடாகிறாா். பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மதுரை மூன்றுமாவடிக்கு மே 4-ஆம் தேதி வந்தடைகிறாா். இதைத் தொடா்ந்து, எதிா்சேவை நிகழ்வு நடைபெற உள்ளது.

பின்னா், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறாா். அங்கு கள்ளழகா் திருக்கோலத்திலிருந்து பெருமாள் கோலத்தில் திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறாா். பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் நாச்சியாா் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். மே 5-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தமுக்கம் மைதானம் அருகே உள்ள கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறாா்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com