ஆக.7ல் நெசவாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற முடிவு!
காஞ்சிபுரம்: தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படும் நாளில் தமிழகம் முழுவதும் நெசவாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்து நெசவுத் தொழிலாளர்கள் சங்கத்தில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி அருகில் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க அலுவலகம் உள்ளது. இச்சங்க கூட்டம் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.பழனி முன்னிலை வகித்தார்.
சங்க மாவட்டச் செயலாளர் வி.சிவப்பிரகாசம் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கூறியது..
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்யக் கோரி கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு அதை தடுப்பதற்கான முயற்சிகளை முறையாக மேற்கொள்ளவில்லை.
இதன் அடுத்த கட்ட முயற்சியாக வரும் 7 தேசிய கைத்தறி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர்கள் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நாளில் காலையில் காஞ்சிபுரத்தில் சங்க அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.