எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாகை: மின்சாரம் தாக்கி மாணவர், புற்றுநோய்க்கு தந்தை பலி; தாத்தா தற்கொலை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்து இரண்டு நாள்களில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன், தந்தை, தாத்தா உயிரிழப்பு

Updated On :10 ஆகஸ்ட் 2023, 1:19 pm IST

நாகப்பட்டினம்: கீழையூர் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்து இரண்டு நாள்களில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் - தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்ற நிலையில் இருந்த கோகுலின் தந்தை பன்னீர்செல்வம், கடந்த 6-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

பன்னீர்செல்வம் உயிரிழந்து இரண்டு நாள்கள் ஆகிய நிலையில் புதன்கிழமை இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கோகுல் விளையாடி கொண்டிருந்தபோது,  அவருடைய தாத்தா இளங்கோ(75) மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் இணைப்பு வந்ததை அடுத்து முதியவர் இளங்கோவின் கைகளில் மின்சாரம் தாக்கவே அச்சத்தில் மின்கம்பியை தூக்கி வீசியுள்ளார். முதியவர் இளங்கோ தூக்கியெறிந்த மின்கம்பி விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சிறுவன் கோகுல் தூக்கி வீசப்பட்டார்.

Story image

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Story image

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாத்தா இளங்கோ வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்து கொண்டார்.

Story image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்து 2 நாள்களே ஆன நிலையில் அவருடைய 14 வயதே ஆன சிறுவன் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவமும், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் காமேஷ்வரம் சுற்றுவட்டார கிராம மக்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.