ஆரோவில் அருகே தகாத உறவைக் கண்டித்த இளைஞர் குத்திக் கொலை

ஆரோவில் அருகே தகாத உறவைக் கண்டித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரோவில் அருகே தகாத உறவைக் கண்டித்த இளைஞர் குத்திக் கொலை
Published on
Updated on
1 min read

ஆரோவில் அருகே தகாத உறவைக் கண்டித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி குருசுக்குப்பத்தைச் சேர்ந்தவர் முகுந்தன் வயது 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் ஆரோவில் அருகே உள்ள குமரன் நகர் சேரன் வீதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். மேலும் செல்லப் பிராணியான நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருவதை தொழிலாக செய்து வந்தார். இவரது வீட்டின் எதிரே மாமியார் கோமதி வசித்து வந்த நிலையில் கோமதிக்கும் புதுவை பகுதியைச் சேர்ந்த தேவா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. 

மாமியார் கோமதி வீட்டுக்கு தேவா அடிக்கடி வந்து செல்வதை முகுந்தன் தட்டிக் கேட்டுள்ளார். நேற்று இரவு மனைவி ரம்யா உடன் புதுச்சேரி தியேட்டரில் ஜெயிலர் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தேவாவுக்கும் முகுந்தனுக்கும் இடையே பிரசனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் முகுந்தன் வீட்டுக்கு வந்த தேவா மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை சரமாரியாக வயிறு கழுத்து பகுதியில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். 

கணவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த மனைவி ரம்யா கண்முன்னே சரிந்து விழுந்த முகுந்தன் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். ரம்யா கூச்சலிடவே  அக்கம் பக்கத்தில் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கடந்த முகுந்தனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வந்து முகுந்தன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலையான முகுந்தனுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தனது மாமியாரிடம் தகாத உறவு வைத்திருந்ததை தட்டிக்கேட்ட முகுந்தன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தேவாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.