விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று(ஆக. 17) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய அடுத்த புகைப்படத்தை பகிர்ந்த இஸ்ரோ!
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தனது பிறந்தநாளையொட்டி தொல். திருமாவளவன், நேற்று(புதன்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் திருமாவளவனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.