நேற்று பதாகை, இன்று கட்சி கொடிமரம் அகற்றம்: 2 ஆவது நாளாக விசிக சாலை மறியல் 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இரண்டாவது நாளாக சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுப்பட்டனர். 
கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.


கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இரண்டாவது நாளாக சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுப்பட்டனர். 

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி வைத்திருந்த பதாகையை நேற்று மா்ம நபா்கள் அகற்றியதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினா் வெள்ளிக்கிழமை மட்டங்கால் பேருந்து நிறுத்தம் முன் பட்டுக்கோட்டை- கந்தா்வகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீசார் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனா். தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  கொடியை ஏற்றி விட்டு சென்று விட்டனர்.  மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விசிக கட்சி கொடி கம்பத்தை யாரோ எடுத்து சென்று விட்டனர், இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடி கம்பத்தை, பதாகைகளை அகற்றியவர்களை கைது செய்யக்கோரி மீண்டும் அதே பகுதியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீசார், வட்டாட்சியர் கே.காமராஜ் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி மறியலில் ஈடுப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com