விழுப்புரம்: விழுப்புரம் அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 85-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஒருவர் குல்பி ஐஸ் விற்றுள்ளார். இதை கிராமத்திலுள்ள பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் வாங்கி சாப்பிட்டனர்.
இந்த நிலையில். நள்ளிரவில் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 85 பேர் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்ற கண்ணன் என்பவரை கஞ்சனூர் போலீசார் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










