சென்னை நாள்: புகைப்படக் கண்காட்சியை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை நாளையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்து பார்வையிட்டார். 
சென்னை நாள்: புகைப்படக் கண்காட்சியை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை நாளையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்து பார்வையிட்டார். 

ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் மாகாணம் தோற்றுவிக்கப்பட்ட ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இன்று சென்னை நாளையொட்டி தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

சென்னையின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற இடங்களைக் குறிப்பிடும் கருப்பு- வெள்ளை படங்கள் இடம்பெறும் புகைப்படக் கண்காட்சி சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னை பள்ளி மாணவர்களின் 'அக்கம் பக்கம்' என்ற இந்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com