
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை திருவனந்தபுரத்தில் பேட்டி எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் பலியானதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை திருவனந்தபுரத்தில் பேட்டி எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க | நான்குனேரி அருகே விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி, 3 பேர் காயம்
விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், மற்றும் நாராயணன் ஆகியோர் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் போற்றத்தக்க பத்திரிக்கையாளர் பணியின் போது விபத்தில் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் இந்த அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டுமென அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...