
நெல்லையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்த்தில் 29 மாணவர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பயிற்சிக்கு 29 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் தனியார் இன்று மாலை பேருந்தில் சென்றிருக்கின்றனர்.
அப்போது திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி பள்ளி அருகே சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சாலனி (9), மணிகண்டன்(11) உள்பட 29 பள்ளி மாணவர்கள், 5 ஆசிரியர்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: மைதானத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மாணவர் மரணம்: அண்ணாமலை கண்டனம்
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...