
கோப்புப்படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரப்படைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு
இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு, காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
படிக்க: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
இந்த துயரமான நேரத்தில், மாணவர் ரிஷிபாலனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
படிக்க: போலி காசோலை செலுத்தி கடவுளுக்கே ஷாக் கொடுத்த பக்தர்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...