

நடிகை விஜயலட்சுமியின் புகாருக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மீண்டும் புகார் அளித்தார்.
அப்போது பேசிய விஜயலட்சுமி, சீமானை நம்பி தற்போது இந்த இடத்தில் நிற்பதாகவும், அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலட்சுமி புகார் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைகிறேன். எனக்கு பல கோடிக் கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து பேசிய சீமான், “ஆளுநர் ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்” என்று கடுமையாக விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.