அம்மன் கோயிலில் ஆண்கள் பூஜை! மனைவி, குழந்தைகளுக்காக பெளர்ணமி பூஜை நடத்திய ஆண்கள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கோயில்களில் புதன்கிழமை இரவு மகா பௌர்ணமி தினத்தையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் சுமங்கலி பெண்கள் திருவிளக்கு ஏற்றி குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், வாழப்பாடி அருகே மன்னார்பாளையம் கிராமத்தில் மட்டும் வித்தியாசமான முறையில், மனைவி, குழந்தைகள் நன்மைக்காக அம்மன் கோயிலில் ஆண்கள் சிறப்பு பூஜை வழிபாட்டில் பங்கேற்றனர். அம்மனை வழிபட்ட பிறகு மனைவிகளுக்கு மாலையணிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். 

இதனைத்தொடர்ந்து, கணவர் மற்றும் குழந்தைகள் நலன் காக்க சுமங்கலி பெண்கள்,  விளக்கு பூஜை நடத்தினர். 

அம்மன் கோயிலில் மஹா பௌர்ணமி சிறப்பு பூஜை வழிபாட்டில், மனைவி குழந்தைகள் நலனுக்காக ஆண்கள் பங்கேற்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com