கம்பத்தில் மூதாட்டி கொலை:6 நாட்களுக்கு பின் சிறுவன் கைது

தேனி மாவட்டம்,கம்பத்தில் மூதாட்டியை கொலை செய்ததாக 6 நாட்களுக்கு பின் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனை தெற்கு போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கம்பத்தில் மூதாட்டி கொலை:6 நாட்களுக்கு பின் சிறுவன் கைது

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் மூதாட்டியை கொலை செய்ததாக 6 நாட்களுக்கு பின் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனை தெற்கு போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம்,கம்பம் சுருளிப்பட்டி தெருவில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய்(80), இவர் மகன் வழிப்பேரன் போத்திராஜாவின் பராமரிப்பில் தனியாக வசித்து வந்தார்.நவ.25-ஆம் தேதி வீட்டில் தலையில் காயம்பட்டு இறந்து கிடந்தார்.வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு,ராமுத்தாய் அணிந்திருந்த தங்க நகையையும் காணாமல் போயிருந்தது. 

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.லாவண்யா தலைமையில் தனிப்படையினர் கொலையாளியை தேடி வந்தனர்.5 நாள்களாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்காமல் திணறிய போலீசார் கைரேகை பதிவு அடிப்படையில் அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக இருக்கும் 50-க்கும் மேலானவர்களிடம் கைரேகை எடுத்து விசாரித்ததில் பவுன்ராஜ் என்பவரின் 13 வயது மகன் கைரேகை ஒத்துப்போனது. 

விசாரணையில், தண்ணீர் கேட்டதாகவும் அதற்கு ராமுத்தாய் திட்டியதாகவும்,ஆத்திரமடைந்து கீழே தள்ளிவிட்டதில் இறந்துவிட்டதால், அணிந்திருந்த தங்க நகையை எடுத்து வீட்டில் மறைத்து வைத்து விட்டதாக கூறிய சிறுவன்,இது தனது பெற்றோர்களுக்கும் தெரியாது என்று தெரிவித்தான்.

இதுதொடர்பாக சிறுவன் மீது தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சனிக்கிழமை ஆஜர் படுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com