தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மிக்ஜம் புயல் மீட்புப் பணிக்கு வந்தபோது விபத்து: நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பலி

விக்கிரவாண்டி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ராஜபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பலியானார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :5 டிசம்பர் 2023, 7:37 am

DIN

விக்கிரவாண்டி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ராஜபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பலியானார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையோர மரத்தில்  கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னை மழை, வெள்ள மீட்புப் பணிகளுக்காக சென்ற நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பலத்த காயமடைந்து  உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவர்  மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் என்.கே. நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஜெயபால் மூர்த்தி(50). விருதுநகரைச் சேர்ந்தவர் ரா.பழனிகுரு(54). இருவரும் விருதுநகர்  மாவட்டம், ராஜபாளையம்  நகராட்சியில்  துப்புரவு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தனர்.

தமிழக முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து மிக்ஜம் புயல் மழை மீட்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை  இவர்கள் இருவரும் ராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு காரில்  சென்றுக்கொண்டிருந்தனர். ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் முருகானந்தம்(41) காரை ஓட்டினார்.

திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில்  மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் துப்புரவு ஆய்வாளர் ஜெயபால்மூர்த்தி நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார். துப்புரவு ஆய்வாளர் பழனி குரு, கார் ஓட்டுநர் ஆகியோரை  காவல் துறையினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.