தங்கம் விலை சவரனுக்கு ரூ.260 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.260 குறைந்துள்ளது.
தங்கம்
தங்கம்

சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.260 குறைந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு கிராம் ரூ.5975-க்கும், சவரன் ரூ. 47,800-க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,500 அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 35 குறைந்து ரூ. 5,815-க்கு விற்பனையாகி வருகின்றது. சவரன் ரூ. 46,520-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை நேற்றைவிட 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.81-க்கும், ஒரு கிலோ ரூ. 81,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com