இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து தேமுதிக நிறுவனத் தலைவரும், தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(டிச.11) வீடு திரும்பினார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:24 pm

DIN


சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து தேமுதிக நிறுவனத் தலைவரும், தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(டிச.11) வீடு திரும்பினார்.

தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் தனியாா் மருத்துவமனையில் விஜயகாந்த் கடந்த நவ.18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழு சிகிச்சையளித்து வந்தனர்.

இந்த சூழலில் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அந்த கட்சியினா் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனா். தேவாலயம் மற்றும் பள்ளிவாசலில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்,  “விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். நல்ல உடல் நலத்துடன் இரண்டு மூன்று நாள்களில் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(டிச.11) வீடு திரும்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.