
தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி
வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை நடைபெற்ற அமமுக சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூர்: வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற 10 மாவட்டங்களிலுள்ள அமமுக சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
வருகிற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் போட்டியிட இருப்பதாக கூறுவது ஊக அடிப்படையிலான தகவல். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சரியான நடவடிக்கை அல்ல. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்னை.மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது என்றார் தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






