‘எதிர்காலத்தில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்’

எதிர்காலத்தில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 
‘எதிர்காலத்தில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்’

சென்னை: எதிர்காலத்தில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. 

மேலும், அடுத்த 24 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

“மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்யவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாகதான் ஒருநாள் முழுவதும் அதிக கனமழை பெய்துள்ளது. காலநிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 3-ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையால் மாநகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com