உணவு, மருத்துவம்: அவசர உதவி எண் 80778 80779!

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு உதவும் வகையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, மருத்துவம்: அவசர உதவி எண் 80778 80779!

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு உதவும் வகையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.

மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்.

தொடர்பு எண்: +91 80778 80779

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு - தேவர்குளம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து சேவை அந்த மார்க்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால், பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் அந்த வழித்தடத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com