பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்விக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 7ம் தேதி வரை நேரம் இருப்பதால் அதுவரை காத்திருக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் ஒன்றிணைந்த அதிமுக வேட்பாளரே போட்டியிட வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இன்று காலை அதிமுக இடைக்கால பொது செயலாளரும் எதிர்கட்சி சட்டமன்ற தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்தோம்.
1972 இல் அதிமுக உருவாகும் போது அதனை உருவாக்கிய கட்சி தலைவரான எம்ஜிஆர் திமுகவை ஒரு தீய சக்தி என குறிப்பிட்டார். அது தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது. ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று தான் குற்றம் சாட்டியுள்ளார். மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருகிறது.
இதற்கு காரணம் ஊழல், திமுகவினர் ஒரு குடும்ப வளர்ச்சிக்காகவே உழைப்பது, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பால் விலை உயர்வு, மேலும் கட்டப்பஞ்சாயத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
திமுக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகள் தொடர்ந்து தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். திமுகவை வீழ்த்த ஒன்றிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் அதற்கு ஒன்றிணைந்த அதிமுக அவசியம். திமுகவை எதிர்த்து போட்டியிட ஒரு உறுதியான வேட்பாளர் வேண்டும் அதற்கு அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் இதனை தாங்கள் நேரில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்விக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 7ம் தேதி வரை நேரம் இருப்பதால் அதுவரை காத்திருக்குமாறு செய்தியாளர்களிடம் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!

வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ கால், குரூப் வாய்ஸ் அம்சங்கள்!

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



