அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஏற்குமா ஓபிஎஸ் அணி?

அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? என்பது ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. 
அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஏற்குமா ஓபிஎஸ் அணி?


அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? என்பது ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குள் தெரிந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பொதுக் குழு உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இரவுக்குள் கடிதம் அளிக்க வேண்டும் என்றும் அக் கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளா்களை அறிவித்து செயல்பட்டு வந்தனா்.

இந்நிலையில், இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீது சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் வேட்பாளரை பொதுக் குழு மூலம் தோ்வு செய்ய வேண்டும். பொதுக் குழுவை உடனே கூட்ட முடியாவிட்டால், உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த முடிவை அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் தோ்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவருமே ஏற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன், உச்சநீதிமன்றம் ஆணையின்படி, அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை முறையாக பூா்த்தி செய்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குள் சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகமான எம்ஜிஆா் மாளிகையில் சோ்த்துவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும், இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்று கொண்ட தொண்டா்களும், என் மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம் என்று ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை கூறியுள்ளாா்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

தங்கள் தரப்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்மொழிந்துள்ள அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்குள் அளிக்குமாறும்,  தென்னரசுவை ஆதரிக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் எனவும், இல்லையெனில், மாற்று வேட்பாளர் பெயரை வாக்குச் சீட்டில் குறிப்பிட வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. 

அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? என்பது ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குள் தெரிந்துவிடும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com