
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
11 வழக்குரைஞா்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்ற உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு வழக்குரைஞராக உள்ள விக்டோரியா கெளரியை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் 21 போ் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கும் கடிதம் அனுப்பினா்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விழாவில் விக்டோரியா கெளரிக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், 12 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.