திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News image

விக்டோரியா கௌரி

Updated On :7 பிப்ரவரி 2023, 8:10 am

புது தில்லி: விக்டோரியா கெளரி சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விக்டோரியா கௌரி நியமனத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விக்டோரியா கௌரி, நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்துக்கு அவரது செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க.. கேரளத்தில் முதல் முறை.. தாயாகியிருக்கும் திருநம்பி

விசாரணையின்போது, தானே மாணவனாக இருந்த போது அரசியல் கட்சித் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்று நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது. நீதிபதிகளை அவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையில் பின்தொடர முடியாது. அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பின்னரே, நீதிபதியாக கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, 10.35 மணியளவில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்றுக்கொள்ளவிருந்த நிலையில், 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் திங்கள்கிழமை முறையிட்டாா். இதையடுத்து, இன்று காலை 9.15 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இதையடுத்து, இந்த மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

விக்டோரியா கெளரி உள்பட 11 வழக்குரைஞா்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது.

கடும் எதிர்ப்பு..
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் விக்டோரியா கெளரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

‘இவருடைய பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்திடமும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கும் அவா்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்தவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாசார படுகொலை செய்வதாகவும் வழக்குரைஞா் விக்டோரியா கெளரி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் உள்ளது’ என்று தங்களது மனுவில் மூத்த வழக்குரைஞா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவா்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.