மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கேரளத்தில் முதல் முறை.. தாயாகியிருக்கும் திருநம்பி

பாலினம் மாறிய ஸியா - ஸஹத் தம்பதிகளுக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கவிருக்கிறது. கேரளத்தில் முதல் முறையாக திருநம்பி ஒருவர் தாயாகியிருக்கிறார்.

கேரளத்தில் முதல் முறை.. தாயாகியிருக்கும் திருநம்பி

Published On :


பாலினம் மாறிய ஸியா - ஸஹத் தம்பதிகளுக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கவிருக்கிறது. கேரளத்தில் முதல் முறையாக திருநம்பி ஒருவர் தாயாகியிருக்கிறார்.

ஸியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திருநம்பி தாயாகியிருப்பதாக அறிவித்துள்ளார்.

ஸியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். ஸஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆணாகப் பிறந்த பெண்ணாக மாறும் சிகிச்சையின்போது, ஸஹத் மகப்பேறு அடைந்தார்.  இதனால், அந்த சிகிச்சை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஸஹத்துக்கு பிறப்பிலேயே கருப்பை இருந்ததால் இது நடந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.

நான் பிறப்பால் பெண் இல்லை.. உடலாலும் பெண் இல்லை. ஆனால் என்னுடைய எண்ணம் நான் ஒரு பெண். எனக்குத் தயாக வேண்டும். ஒரு குழந்தை என்னை அம்மா என அழைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது ஸஹத் கருவுற்றிருக்கிறார். எட்டு மாதங்கள் எங்கள் கனவுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஸியா இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

எங்களது பயணத்துக்கு உற்றத் துணையாக இருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் இவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள திட்டமிட்டனர். ஆனால், திருநங்கை  - திருநம்பி தம்பதிகள் குழந்தை தத்தெடுப்பதில் பல சட்டவிதிகள் கடுமையாக இருப்பதால் அந்த திட்டத்ததை கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், ஸஹத் இயற்கையிலேயே பெண்ணாக இருந்ததால், அவர் கருவுறுவதில் எந்த சிக்கலும் எழவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், இதில் ஸஹத்துக்கு விருப்பமில்லை. ஆனால், பிறப்பில் ஆணாக இருந்த ஸியாவுக்கு குழந்தைகள் மீது இருந்த அன்பு காரணமாக ஸஹத்தை ஒப்புக்கொள்ள வைத்து, மனமாற்றம் செய்து இன்று குழந்தை பிறக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.