சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆங்கிலேயர் கால வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டிக்கத் தக்கது என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசிய போது, முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.
உதயநிதி கைதுக்கு எதிராக பிரேமலதா வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமை. கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பு.
கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தும்.

ஆங்கிலேயரின் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கம் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
சட்டப்பேரவை தொடங்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்.
அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள், தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவுத்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று பிரேமலதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Summary
Premalatha condemns Udhayanidhi's arrest, likening it to the 'gag laws' of the British era.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு! விசாரணை ஒத்திவைப்பு!
அராஜக அரசியல் செய்யும் தவெக! உதயநிதி கைதுக்கு மேயர் பிரியா கண்டனம்!
உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்!

உதயநிதி கைது! பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் நடவடிக்கை: ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




