மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அராஜக அரசியல் செய்யும் தவெக! உதயநிதி கைதுக்கு மேயர் பிரியா கண்டனம்!

அராஜக அரசியல் செய்யும் தவெக என்று உதயநிதி கைதுக்கு மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

chennai mayor priya

மேயர் பிரியா - x / mayor priya

Published On :

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன. தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஒவ்வொரு நாளும் போராடும் நிலை உள்ளது. பல இடங்களில் மின் தடைக்காக மக்கள் போராடுகிறார்கள். தண்ணீர் பிரச்னை உள்ளது.

இப்படி, தமிழ்நாடு முழுவதும் பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காத தமிழக அரசு, இன்று அரசியலில் கருத்துக் கூறினார் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது.

இது கண்டித்தக்கத்தக்கது. அராஜகமான அரசியலைத்தான் தவெக அரசு செய்து வருகிறது. இன்று அமைச்சர்களாக இருப்பவர்கள் கடந்த திமுக ஆட்சியின்போது முட்டாள் முதல்வர் என்று சொன்னதெல்லாம் தவறில்லை. இன்று முதல்வராக இருப்பவர், என்ன டேஷ் செய்கிறீர்கள் என்று கேட்டாரே, அது தகாத வார்த்தையில்லையா?

தவெக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை முன் வைக்கும் பெண்கள், சமூக வலைத்தளத்தில் தவெகவினரால் மிக மோசமாக நடத்தப்படுவது தண்டிக்கத்தக்கது இல்லையா?

தவெகவுக்கு எதிராக யார் பேசினாலும் அது குற்றம் என்கின்றனர். இன்று ஆட்சி இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது என்று தவெக அரசு, குற்றம் செய்யாதவரை கைது செய்வதை கண்டிக்கிறோம்.

சட்ட ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இதனை சந்தித்து எதிர்த்து வெற்றி பெற்று வருவார்.

சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது, தவெக அரசு எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையே காட்டுகிறது என்றும் மேயர் பிரியா கூறியிருக்கிறார்.

Summary

TVK engages in anarchic politics! Mayor Priya condemns Udhayanidhi's arrest!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.