எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

உதயநிதி கைது! பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் நடவடிக்கை: ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி என ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

News image

ஆர்.எஸ். பாரதி - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:13 am IST

தஞ்சையில், முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், உதயநிதி விசாணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில், உதயநிதி, நாளை தொடங்கும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட புகார்களில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழக முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமரிசித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிறகு, உதயநிதி வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். உடனடியாக உதயநிதி தன்னுடைய வழக்குரைஞர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயநிதியின் வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகவும் பகல் 12 மணி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யத் திட்டமிடுவதன் மூலம், அவர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுக்க அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தமிழக காவல்துறை கைது செய்திருக்கிறது.

Summary

prevent from Udhayanidhi attending the Assembly R.S. Bharathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.