சென்னையில் மீண்டும் டிராம் ரயில்கள்?

சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பறக்கும் ரயில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்கும் மெட்ரோலைட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
பழைய டிராம் - புகைப்படம்
பழைய டிராம் - புகைப்படம்


சென்னை: சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பறக்கும் ரயில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்கும் மெட்ரோலைட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் எம்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுக்கான நிதியை திரட்டுவதற்கான ஒப்பந்த ஏலத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (சியுஎம்டிஏ) திங்கள்கிழமை முன்வைத்துள்ளது.  

மெட்ரோ ரயில் திட்டத்தில் 40 - 50 சதவிகித செலவு மெட்ரோலைட் திட்டத்துக்கு ஆகும், மெட்ரோ ரயில் வளாகங்கள் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்டங்களை இணைத்தல், இது 5 முதல் 6 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்டிருக்கும் என்று சித்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே தொடர்பிலிருந்து மெட்ரோலைட் சற்று வித்தியாசப்படும், இது முன்பு பயன்படுத்தப்பட்ட டிராமின் மேம்படுத்தப்பட்ட அம்சமாக அல்லது மெட்ரோ ரயில் பெட்டியில் இருக்கும் வசதிகள் சற்று குறைந்த அம்சமாக இருக்கும். இது தரையில் இயங்கும் வசதியுடன் தனித்துவமான தண்டவாளங்களில், சாலையிலிருந்து வேலி அல்லது சுவரால் பிரிக்கப்பட்ட தனி பாதையில் இயக்கப்படும்.

ஒருங்கிணைந்த போக்குவரத்துதிட்டத்தின் கீழ், மெட்ரோ மூன்றாம் கட்டப் பணிகள் ஒன்று சாதாரண மெட்ரோ ரயில் திட்டமாகவோ அல்லது மெட்ரோலைட்டாகவும் இருக்கலாம்.

இது இந்த விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படவிருக்கிறது. இதற்கான நிதி ஆதாரம் இன்னும் ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் மெட்ரோ ரயில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று சியுஎம்டிஏ சிறப்பு அதிகாரி ஐ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த சென்னை மாநகரையும் இணைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒன்று மட்டும் போதாது. நகரங்களின் உள் பகுதிகளை இணைக்க இரண்டு போக்குவரத்து திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒன்று, சாலைப் போக்குவரத்து அல்லது மெட்ரோலைட். மெட்ரோ ரயில் திட்டத்துடன் மெட்ரோலைட்டை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தனியார் போக்குவரத்துக்கு மாறாக, பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 

தற்போது மெட்ரோ ரயில் பாதை விரிவுபடுத்தப்படும் நிலையில், அதற்கான ஆதரவும் அதிகரித்துக்கொண்டே போகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் இடையே  பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும், இதன் மூலம் பொதுமக்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மாறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

மெட்ரோ ரயில்கள் 12 பெட்டிகளுடன் 2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பயணிகள் வரை பயணிக்கும் வசதியுடன் இருக்கும். இந்த மெட்ரோலைட் மூன்று பிரிக்கப்படாத பெட்டிகளுடன் அதிகபட்சம் 300 பயணிகள் பயணிக்கும் வசதியுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com