மேகாலயாவில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் 5 நட்சத்திர மாநிலத்திற்கு அடித்தளமாக இருக்கும்: மல்லிகார்ஜூன கார்கே

மேகாலயத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் 5 நட்சத்திர மாநிலத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மேகாலயாவில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் 5 நட்சத்திர மாநிலத்திற்கு அடித்தளமாக இருக்கும்: மல்லிகார்ஜூன கார்கே
Published on
Updated on
1 min read

புதுதில்லி: மேகாலயத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் 5 நட்சத்திர மாநிலத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேகாலயாவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. 

பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மேகாலயா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மாதம் 3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி செய்யப்படும். வீடு மற்றும் கடைகளுக்கு தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும், அனைவருக்கும் இலவச மருத்துவம் மற்றும் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி என்று கடந்த 9 ஆம் தேதி மேகாலயா காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் 5 நட்சத்திர மாநிலத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்கே ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள மேகாலயா மக்களே, மேகாலயா காங்கிரஸ் உங்கள் எதிர்காலத்திற்காக 5 உறுதியான வாக்குறுதிகளை அளித்துள்ளது. காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் '5 நட்சத்திர மேகாலயா'விற்கான அடித்தளமாக இருக்கும்." "பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது; மின்சாரம் தடையில்லா மேகாலயா; போதைப்பொருள் இல்லா மேகாலயா; வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத மேகாலயா; ஊழல் இல்லாத மேகாலயா," என்று மேகாலயாவை '5 நட்சத்திர' மாநிலமாக மாற்றுவதற்கான காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com