வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தில்லி-மும்பை விரைவுச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

நாட்டிலேயே மிக நீண்ட  தில்லி-மும்பை  விரைவுச்சாலையின் 246 கி.மீ. வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 4:08 pm IST


புதுதில்லி: நாட்டிலேயே மிக நீண்ட  தில்லி-மும்பை  விரைவுச்சாலையின் 246 கி.மீ. வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்து விரைவுச்சாலை, பயண நேரத்தை பாதியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

1,386 கி.மீ தொலைவு கொண்ட நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை தில்லி மற்றும் மும்பையை இணைக்கும். 

தில்லி-மும்பை விரைவுச்சாலை திட்டத்தின்கீழ் 1,386 கி.மீ நீளமுள்ள விரைவுச்சாலை நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இதற்கான மொத்த செலவு தோராயமாக ரூ.1 லட்சம் கோடி.

மேலும், விரைவுச்சாலை திட்டம் முழுமையாக முடிந்தவுடன் தில்லி-மும்பை பயணம் நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் (50 சதவீதமாக) குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தில்லி-மும்பை விரைவுச்சாலை திட்டம் தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய 6 வழியாக செல்லும். கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. முக்கியமான 8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கும்.

தில்லி-மும்பை இடையிலான விரைவுச்சாலை திட்டத்தின் முதல் பகுதியாக தில்லி-டெளசா (ராஜஸ்தான்)-லால்சோட்(ராஜஸ்தான்) பகுதிகளை இணைக்கும் 246 கி.மீ தொலைவிற்கு தில்லி-தௌசா-லால்கோட் பகுதி ரூ.12,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையையும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

இந்தச்சாலை தில்லியில் இருந்து ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூருக்கான பயண நேரம் 5 மணியில் இருந்து மூன்றரை மணி நேரமாகக் குறைக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.