ட்விட்டரின் புதிய சிஇஓ-வை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்! 

ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) இவர்தான் என புகைப்படத்தை வெளியிட்டு எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) இவர்தான் என புகைப்படத்தை வெளியிட்டு எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

இதன் பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியிருந்தாலும், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடர அவர் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், ட்விட்டருக்கான சிஇஓ பதவி காலியான நிலையில், ட்விட்டரை இயக்குவதற்கான சரியான தலைமை நிர்வாக அதிகாரியை மஸ்க் நீண்ட காலமாக தேடிவருகிறார். முன்னதாக, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக ஒருவரைக் கண்டுபிடித்தவுடன் அந்த பதவியில் இருந்து தான் விலகுவதாகக் கூறி மஸ்க் ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார், அந்த பதவியை ஏற்பதற்கான சரியான "முட்டாள்" ஒருவரை தேடி வருகிறேன் என்று பதிவிட்டிருந்தார். 

பின்னர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் நீடிக்க வேண்டுமா என்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பையும் நடத்தினார். ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகள் அவர் வெளியேறுவதற்கு சாதகமாக அமைந்தன. எவ்வாறாயினும், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக தனக்கு ஆதரவு இல்லை என்று மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில், அவர் புதிய சிஇஓ-வை அறிமுகப்படுத்தி உள்ளார். அது வேறு யாருமல்ல, அவருடைய செல்லப் பிராணியான பிளாக்கி, அவருடைய ஷிபா இனு நாய். ஆனால், வேடிக்கையாக எலான் மஸ்க் தனது செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கியின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இதுதான் ட்விட்டரின் புதிய சிஇஓ என மஸ்க் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில், இதுபற்றி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள எலான் மஸ்க், அதில், சிஇஓ நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. அதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் சிஇஓ என்று எழுதியபடியும் காணப்படுகிறது.  "புதிய சிஇஓ" "மற்ற நபரை விட மிகவும் சிறந்தவர்" என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் வெளியிட்டு, ட்விட்டரின் புதிய புதிய தலைமை நிர்வாக அதிகாரியை (சிஇஓ) பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என மஸ்க் தெரிவித்து உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com