கோவை அருகே காட்டு யானை அட்டகாசம்: காட்டுக்குள் விரட்ட முயற்சி

கோவை அருகே அட்டகாசம் செய்துவரும் காட்டு யானையை, வனத் துறையினர் காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர். 
கோவை அருகே காட்டு யானை அட்டகாசம்: காட்டுக்குள் விரட்ட முயற்சி

கோவை அருகே அட்டகாசம் செய்துவரும் காட்டு யானையை, வனத் துறையினர் காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர். 

கோவை தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், காளையனூர், வரபாளையம், பொன் ஊத்து நரசிபுரம், வைதேகி பால்ஸ் போன்ற மலைவாழ் கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. 

இங்கு வன விலங்குகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகமாக காணப்படுகிறது மேலும் இந்த வனவிலங்குகள் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் ஊருக்குள் வந்து விவசாயிகள் பயிரிடப்பட்டிருக்கும் விளைநிலங்களை மற்றும் விளைப் பொருட்களை அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தவிர உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. 

இன்று காலை 7 மணி அளவில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட கோவனூர் மலையடிவாரமான கிராமத்தில் ரங்கராஜ் என்பவரது விவசாயி தோட்டத்தில் விரி கொம்பன் என்ற ஒற்றைக் காட்டு யானை விவசாய தோட்டத்தில் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த வனத் துறையினர் யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர். 

விரிக்கொம்பன் என்ற ஒற்றைக் காட்டு யானை 20 தினங்களுக்கு முன்பு பெருமாள் என்பவரை மிதித்து கொன்று உள்ளது. மேலும், ஒரு பெண்ணையும் கீழே தள்ளி கை கால்களை உடைத்துள்ளது இது பற்றி அந்த ஊர் விவசாயிகள் கேட்டபோது யானைகள் உள்ளே வராமல் தடுக்க வனத்துறையினர் செய்திருந்த அகழிகள் சரியான பராமரிப்பு இல்லாத நாளும்,  மேலும் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அதற்கு குடிக்க தேவையான தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் எனவும், முறையான பராமரிப்பு இல்லாததனால் யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன எனவும், கோடைக் காலங்களில் யானைகள் அதிகமாக ஊருக்குள் வந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், வனத் துறையினரின் எண்ணிக்கை மிக அதிகமாக்க வேண்டும், யானைகள் ஊருக்குள் வந்தால்  வனத் துறையினர் தாமதமாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். 

மேலும் தமிழக அரசு மற்றும் வனத் துறையினர் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com