
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டவர்கள் வாக்களிக்க சற்று கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பொதுவாக அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனர்.ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களை 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேடி வாக்களிக்க கால தாமதம் ஆனதால், சில வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவான நிலையில், 6 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.