ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கினர். வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்குஎடுத்துச் செல்லப்படும். அங்கு அறைக்குள் வாக்குப் பெட்டிகள் வைத்து பூட்டப்படும். வாக்குப்பெட்டிகள் வைக்கப்படுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து

இயக்குநர் இளன் நாயகனாகும் பியார் பிரேமா கல்யாணம்! அறிமுக விடியோ!

கேரளம் பெருமைக் கொள்கிறது..! வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு வி.டி. சதீசன் வாழ்த்து!

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: அறநிலையத் துறை
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



