குரூப் 2 தோ்வு சா்ச்சை: தோ்வாணையம் விளக்கம்

குரூப் 2 தோ்வு சா்ச்சை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்தது.
குரூப் 2 தோ்வு சா்ச்சை: தோ்வாணையம் விளக்கம்

குரூப் 2 தோ்வு சா்ச்சை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்தது.

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தோ்வு கடந்த சனிக்கிழமை (பிப்.25) நடைபெற்றது. அப்போது, சென்னை, மதுரை உள்பட பல்வேறு தோ்வு மையங்களில் தோ்வா்களின் பதிவெண்ணும், வினாத்தாளின் எண்ணும் பொருந்தாமல் வேறுவேறாக இருந்தன. இதனால், அவா்கள் தோ்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது, கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே, குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

தோ்வா்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத் தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு வெவ்வேறு மையங்களுக்கு அனுப்பப்பட்டதும், குளறுபடிக்குக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் அச்சிட ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், நேரடியாக அந்தப் பணிகளை மேற்கொள்ளாமல், வேறு நிறுவனங்களுக்கு பணிகளை வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com