40 ஆண்டு ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு ஆலமரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆலமரம் வெட்டப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் ஒட்டு மொத்த மரமும் சிலரால் வீழ்த்தப்பட்டது பெருங்குற்றம். இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
40 ஆண்டுகள் அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்ட ஆலமரம் சிலரின் சுயநலத்திற்காக வீழ்த்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. வெட்டப்பட்ட ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிக்க..இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
தமிழ்நாட்டில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது. அதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில, மாவட்ட பசுமைக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.