
இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயர்வு!
அரசு ஆசிரியர், ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.