

சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஹெல்மெட் போடாதவர்களை குற்றவாளிகள் போல் காவலர்கள் நடத்தப்படுவதை கைவிட வேண்டும். சேலம் முள்ளுவாடிகேட் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். நாகலிங்கம், பாலு, குணசேகரன், தமயந்தி, வெங்கடேசன், மலர்பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிக்க: ரூ.3000 கோடி பட்ஜெட்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
மாநில செயலாளர் ஹரிஹரன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினார். இதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.