
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 3,123 கன அடியிலிருந்து 3,165 கன அடியாக சற்று அதிகரித்து உள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.06 அடியிலிருந்து 116.53 அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு மீண்டும் ஒத்திவைப்பு: காரணம் என்ன?
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 88.04 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G