நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ்  திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ்  திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, செங்கரும்பு வினியோகிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 

அதன்படி, தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு சார்பில் சுமார்  2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் மற்றும் முழு கரும்பு இடம்பெற்றுள்ளது. இதற்காக கடந்த 2 ஆம் தேதி முதல் நியாவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2.17 லட்சம்  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

நாகப்பட்டினம் அருகே உள்ள பொரவச்சேரி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில், தமிழக மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com